Skip to main content

Posts

Featured

CSI இராபர்ட்சன் நினைவாலயம்

CSI இராபர்ட்சன் நினைவாலயம், சூலூர் இது பெயர் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டு(1914) கால வரலாற்றின் அடையாளம்... வாழ்வு தருகின்ற இயேசுவை கண்டறிந்த அடையாளம்... விளிம்புநிலை வாழ்விலிருந்து விழித்தெழுந்த அடையாளம்... அறியாமை இருளகற்றி கல்வி ஒளியைக்கண்ட அடையாளம்... அடிமைநிலை வாழ்வை மாற்றி விடுதலை வாழ்வை ருசித்த அடையாளம்... இழந்த உரிமைகளை மீட்டெடுத்த அடையாளம்... போத்தனூர்,ராமநாதபுரம்,சூலூர்,கணியூர்,மோப்பிரிபாளையம்,அன்னூர், கோட்டைப்பாளையம் வரையுள்ள மக்கள் இயேசுவை பின்பற்றுகின்ற அடையாளம்... LMS மிஷ்னரி என்பது அவரின் அடையாளம்... ஆனால் எங்களுக்கு ஆண்டவர் இயேசுவை உங்கள் வாழ்வில் கண்ட அடையாளம்... இதுதான் எங்கள் பெருமை... எங்கள் அடையாளம்... மிளிர்வது பெயர்ப்பலகை மட்டுமல்ல... எங்கள் வாழ்வும்தான்... உங்களை பார்த்ததில்லை உங்கள் அர்ப்பணிப்புள்ள வாழ்வை நினைத்து கடவுளை போற்றுகின்றோம்.

Latest Posts